கடுமையான மூடுபனி; ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பயணிப்போர் அவதானம்
ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதால் சாரதிகள் மிக அவதானத்துடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மோசமான வானிலை காரணமாக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்துகளைக் குறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் வாகனச் சாரதிகளிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

வீதியில் பயணிக்கும் அனைத்து சாரதிகளும் தமது வாகனங்களின் முன்விளக்குகளை (ஹெட்லைட்ஸ்) முறையாக ஒளிரச் செய்து, கவனமாகவும் மிகக் குறைந்த வேகத்திலும் பயணிக்க வேண்டும் என பொலிஸார் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.
விபத்துகளைக் குறைப்பதற்கு சாரதிகளின் விழிப்புணர்வும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என பொலிஸார் மேலும் வலியுறுத்துகின்றனர். எனவே, வாகனச் சாரதிகள் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.