இதய நோய் முதல் முடி பிரச்சனை வரை ....வல்லாரை கீரையின் நன்மைகள்
இதய நோய் முதல் முடி பிரச்சனை வரை பல்வேறு பிரச்சனைகளை வல்லாரை கீரை உண்பதனால் தவிக்கலாம் என கூறப்படுகின்றது.
வல்லாரை கீரையின் நன்மைகள்
வல்லாரை கீரை, கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டு வலியைக் குறைப்பது,
வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துவது, மன அழுத்தம்,
பதட்டத்தைக் குறைப்பது ஆகியவற்றுடன் மூளை செயல்பாடு மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்துவது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஒரு சக்திவாய்ந்த மருத்துவ மூலிகையாகும்.
வல்லாரை கீரை கூட்டு அல்லது பருப்பு, வல்லாரை கீரை துவயல் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.
அத்துடன் சாலடுகள், சூப், இட்லி, தோசை மற்றும் சாம்பாரிலும் சேர்க்கலாம்.
வல்லாரை தாவரத்தின் மற்ற பகுதிகளான தண்டு, பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவையும் எக்ஸிமா போன்ற தோல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்க, நினைவாற்றலை அதிகரிக்க, செரிமானத்திற்கு உதவ என பல்வேறு ஏராளமான இயற்கை வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இது இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்திலும் பாரம்பரிய சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
தினசரி உணவின் ஒரு பகுதியாக வல்லாரை கீரையின் ஒரு சிறிய பகுதியை உட்கொள்வது மத்திய நரம்பு மண்டலத்தில் நரம்பியக்கடத்தி செயல்பாட்டைத் தூண்டுகிறது.
இதன் மூலம் மூளையில் இருந்து உடலின் மற்ற உறுப்புகளுக்கு நரம்பு சமிக்ஞைகள் இயல்பாகச் செல்வதை உறுதி செய்கிறது, அத்துடன் அறிவாற்றல் திறன்களையும் அதிகரிக்கிறது.