அரச வைத்திய சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமைச்சர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான முறையில் நடந்துகொண்டால் இன்று வழங்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை நான் நடத்தமாட்டேன்.

வேலைநிறுத்தம் அநியாயமானது...
இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம்" எனத் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தை தொடர வேண்டாம் எனத் கேட்டுக்கொண்ட அமைச்சர், இன்று முதல் பணியைப் பொறுப்பேற்கவுள்ள புதிய வைத்திய அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால், எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் கடமைக்கு சமூகமளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய நியமனங்களை வழங்குவதில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடுவதே சிறந்தது எனச் சுட்டிக்காட்டினார்.