கிண்ணியாவில் இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் - கிண்ணியா பிரதான வீதியின் சூரங்கல் பகுதியில் இன்று (08) சிறிய ரக பட்டா வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
தம்பலகாமம் பகுதியிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், கிண்ணியா பகுதியில் இருந்து வந்த சிறிய ரக பட்டா வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து காரணமாக குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், போக்குவரத்து மந்தகதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.