மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி மூவருக்கு நேர்ந்த கதி
நெலுவ – மொரவக்க வீதியின் லேல்வல, குருதியபத சந்தியில் இன்று (20) காலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், வீதியின் வலதுபுறமாக மோட்டார் சைக்கிள்கள் செலுத்தப்பட்டமையே இந்த விபத்துக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அக்குரஸ்ஸ, போரம்ப பகுதியைச் சேர்ந்த ஒருவரும், நெலுவ பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரியும் இரு இளைஞர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் நெலுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக உடுகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.