கோட்டாபாயவை நாட்டைவிட்டு துரத்தியடித்தவர் இவரே! அம்பலப்படுத்திய அதிகாரி
கோட்டபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கும் போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க என முன்னாள் இராணுவ அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம் சந்திரிகா குமாரதுங்க சிங்கள பௌத்த மக்கள் மீது வெறுப்பு கொண்டிருப்பவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் காலி முகத்திடல் போராட்டம் என்பது போராட்டம் அல்ல, பயங்கரவாதம் என சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேவை ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியா மூளையாக செயல்பட்டது என்றும் கோட்டாபய ராஜபக்ச தான் அதன் கைக்கூலி என்றும் சந்திரிகா குமாரதுங்க பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.