வெட்கம் இல்லையா உங்களுக்கு! சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா
மலையக தொழிளார்களின் சம்பளம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்தரலிங்கம் பிரதீப் நாடாளுமன்றில் உரையாற்றி கொண்டிருக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சபையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொர்பில் மேலும் தெரியவருகையில்,
வரலாற்றிலே தோட்ட தொழிலாளர்களுக்கு அதி கூடிய பணத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்குவதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு என எல்லா இடங்களிலும் உங்கள் ஆட்சி முடிந்து விட்டது இனி தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி தான் இடம் பெறும் என அவர் நாடாளுன்றில் கூறினார்.
”உங்களுடைய இனத்திற்கே நீங்கள் ஒரு ராத்தல் பாண் தானே கொடுக்கிறீர்கள் முடிந்தால் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் கொடுங்கள்” என நாடாளுமன்றில் இன்று (14) ராமநாதன் அர்ச்சுனா சுந்தரலிங்கம் பிரதீப் உரையாற்றும் போது கொந்தளித்து பதில் அளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்......