நேர்மையாக ஈட்டிய சொத்துக்களை அழித்துவிட்டனர்; புலம்பும் எம்பி!
தான் அரசியலில் இருந்து ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை என்றும், நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தீயிட்டு எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
தனது வீடு எரிக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்து அவர் ,தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மோசடி செய்யாமல் நேர்மையாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமே தன்னிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக பேராசிரியரான நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர பொதுஜன பெரமுன சார்பில் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். இராஜாங்க அமைச்சராக செயற்பட்டுவந்த அவர், கடந்த வாரம் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
