உத்திரபிரதேசத்தில் தஞ்சமடைந்தாரா நாமல் ராஜபக்ஷ?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடு தழுவிய ரீதியில் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்கள் அரசியல் நெருக்கடி காரணமாக தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவும் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று கொண்டார்.
இதேவேளை அரசியல் நெருக்கடி காரணமாக நாமல் ராஜபக்ஷ உத்திரபிரதேசத்தில் தஞ்சமடைந்திருப்பதாக இந்தியாவில் இருந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இருப்பினும் இதற்கு நாமல் ராஜபக்ஷ தரப்பில் இருந்து இதுவரையில் எந்த ஒரு பதிலும் வரவில்லை,
மேலும் கடந்த திங்கட்கிழமை முதல் நாமல் ராஜபக்ஷ பற்றிய எந்த தகவலும் வெளிவாரமால் உள்ளது,