இயற்கை விவசாயப் பண்ணையில் 25,000 வரையான பனங்கிழங்குகள் அறுவடை
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha இயற்கை விவசாயப் பண்ணையில் சமீபத்தில் 25,000 வரையான பனங்கிழங்குகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.
150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி, வாத்து, கருங்கோழி இன்னும் பல்லாயிரம் விலங்குகளும் பறவைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் ஒருபுறம் விலங்கு வளர்ப்பு நடந்துகொண்டிருக்க மறுபுறம் பனங்கிழங்கு, மாமரம், மஞ்சள் என பலவகை பயிர்களும் வளர்க்கப்படுகின்றன.
இயற்கை விவசாயத்தில் பாரிய புரட்சியை நடத்திக்கொண்டிருக்கும் ReeCha நிறுவனம் ஒரே தடவையில் 25,000 பனங்கிழங்குகளை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பியுள்ளது.
இங்கு பிரமாண்டமான பாத்திகளை அமைத்து எமது அடையாளங்களில் ஒன்றாகிய பனங்கிழங்கை நடுகை செய்துள்ளார்கள்.
விவசாயமும் உற்பத்திகளுமே எமது பொருளாதாரத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து ReeCha எடுத்துவரும் இந்தப் பாரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்.