ஹெரி பொட்டர் கதாநாயகன் திடீர் மரணம்
ஹெரி பொட்டர் படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த ராபி கோல்ட்ரேன் தனது 72 வது வயதில் மரணமடைந்துள்ளார்.
ஆனால் அவர் உயிரிழந்ததற்கான காரணம் இன்று வரை உறவினர்களால் தெரிவிக்கப்படவில்லை.
பிரபலமான ஹாலிவுட் திரைப்படமான ஹெரி பொட்டர் ஹாக்வர்ட்ஸ் கேம் கீப்பர் “ஹாக்ரிட்” (Hagrid) என்ற கதாபாத்திரத்தில் நடித்து, உலகம் முழுவதும் அறியப்பட்ட ஸ்காட்டிஷ் நட்சத்திரம் ராபி கோல்ட்ரேன் (Robbie Coltrane) நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
இவர் ஹாக்வர்ட்ஸ் கேம் கீப்பர் ஹாக்ரிட் மற்றும் 1990 களின் தொலைக்காட்சி குற்ற நாடகத்தில் குற்றவியல் உளவியலாளர் டாக்டர் எடி ´ஃபிட்ஸ்´ ஃபிட்ஸ்ஜெரால்ட் போன்ற கதாபாத்திரங்கள் மூலம் கோல்ட்ரேன் அறியப்பட்டார்.
ராபி கோல்ட்ரேன், கிராக்கரில் தனது பாத்திரத்திற்காக பிரிட்டிஷ் அகாடமி தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
ராபி கோல்ட்ரேனின் மரணம் குறித்து எந்த விவரங்களும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் கோல்ட்ரேனின் குடும்பத்தினர் லார்பர்ட்டில் உள்ள ஃபோர்த் வேலி ராயல் மருத்துவமனையில் உள்ள மருத்துவ குழுவினரின் கவனிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ராபி கோல்ட்ரேன் மறைவிற்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் உலக ரசிகர்கள் என பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.