விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் இன்றையதினம் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இண்டஹ் விபத்து சம்பவம், பதுளை – கொழும்பு பிரதான வீதியின் ஹப்புத்தளை - விஹாரகல பகுதியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வந்தனர்.
இதனையடுத்து, பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹொரணை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.