இன்று இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை!
தங்க நகைகள் என்றாலே பெண்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்துவது இயல்பானது. பெண்கள் இப்படி என்றால் ஆண்கள் அதை தங்களது முதலீடாகவும், கஷ்டத்திற்கு உதவும் பொருள்களாகவும் பார்க்கின்றதனால் தங்க நகைகள் மக்கள் மத்தியில் பெறுமதி மிக்கதாக காணப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் அதன் விலை உச்சத்தை அடைந்த நிலையில் அதன் பின் சிறிது குறைந்த நிலையில், தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,888-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, ரூ.4,486-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,600 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.