பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!
சிசு சீரிய பஸ்கள் உட்பட பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பஸ்களும் நாளை முதல் குறித்த நேரத்திற்குள் இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதே நோக்கத்திற்காக 741 மாணவர் பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை, போக்குவரத்து தேவைப்படும் அனைத்து பகுதிகளையும் எவ்வித இடையூறும் இன்றி இந்த பஸ்கள் உள்ளடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திங்கட்கிழமை முதல் 90% தொடக்கம் 95% வரையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு போதிய எண்ணிக்கையிலான பஸ்கள் பயன்படுத்தப்படும் என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் , வேன் இயக்கத்திற்கு தேவையான எரிபொருள் வழங்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை வேன் சங்கத்தின் தலைவர் மல்ஸ்ரீ சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.