நீண்ட நாட்களின் பின் கொழும்பு மற்றும் புறநகர் பகுதி மக்களிற்கு கிடைத்த மகிழ்ச்சி
டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000) பேருந்துகளே நாட்டில் இன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த இக்கட்டான நேரத்தில் மொத்த பேருந்துகளில் 50வீதம் (18,000) மட்டுமே சேவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் டீசலைப் பெற்றுக்கொள்வதற்கு பேருந்துகளை நீண்ட வரிசையில் நிறுத்த வேண்டியுள்ளதெனவும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகித்த போதிலும் இன்னும் குறைபாடுகள் இருப்பதாக விஜேரத்ன கூறினார்.
தனியார் கட்டிடங்களில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு வாடகை கொடுப்பது போன்ற தேவையற்ற செலவுகளையும் அரசு குறைக்க வேண்டும் என்றும் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பணவீக்கத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த பணம் அச்சிடுவதே தீர்வாகும் என்றும் அவர் தெரிவித்தார். இன்று நாட்டில் இடம்பெற்ற செய்திகளின் மேலதிக தகவல் காணொளியில்...