இலங்கை வந்த வெளிநாட்டுக்கு பெண்ணுக்கு இப்படி ஒரு சோகம்!
இலங்கைக்கு வந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பணம் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் பையிலிருந்த 90,000 ரூபா இலங்கைப் பணம் 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்களை நால்வர் கொண்ட குழுவினர் காலி சமனல மைதானத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பெண் முறைப்பாடு
இந்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது ஒரு குழுவினர் அவ்விடத்துக்கு வந்ததுடன் அவர்களில் ஒருவர் பையை எடுத்துக்கொண்டு ரத்கம கடற்கரையை நோக்கி ஓடியுள்ளார்.
இதன்போது பெண்ணும் அவர்களிடமிருந்து தப்பி ஓடியதால், கீழே வீழ்ந்ததில் அவருக்கு கீறல் ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பில் பெண் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.