குரு சுக்கிரன் ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் குருவும், சுக்கிரனும் சுப கிரகங்களாக குறிப்பிடப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்கள் நற்பலன்களைத் தரக்கூடியன என்பதை தாண்டி, தற்போது இந்த கிரகங்கள் தங்களுக்குரிய ராசிகளை பரிவர்த்தன அமைப்பில் அமர்வதால் ஏற்படக்கூடிய ராஜயோகத்தால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்கள் உருவாக போககின்றது என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்கு குரு, சுக்கிரன் உருவாக்கக்கூடிய பரிவர்த்தன யோகத்தால் உங்களின் நிதிநிலை முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. எந்த ஒரு செயலிலும் உங்கள் ஆரோக்கியம் ஆதரவாக இருக்கும். குடும்பம், பணியிடத்தில் இருக்கக்கூடிய கடினமான சூழ்நிலை விலகும். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள காலமாக அமையும். அதிர்ஷ்டத்தின் மூலம் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் போட்டி தேர்வு, விளையாட்டு தொடர்பான விஷயத்தில் மகத்தான வெற்றியை பெறலாம். இழந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டு கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயத்தில் வேகமான வளர்ச்சி எதிர்பார்க்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
கன்னி ராசி
கன்னி ராசிக்கு குரு, சுக்கிரனின் பரிவர்த்தன ராஜயோகம் பலவிதத்தில் நன்மை தரக்கூடியதாக அமையும். குறிப்பாக சுக்கிரன் ராசிக்கு ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவதால், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குறிப்பாக சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய வேலை, தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம். வேலை தொடர்பான பிரச்சனைகள் விலகும். தொழிலில் லாபம் ஏற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்து, வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும்.
மீன ராசி
மீன ராசி சேர்ந்த குரு பகவான் ராசிக்கு மூன்றாம் வீட்டிலும், உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சமடைந்து சஞ்சரிப்பதால் பலவிதத்தில் நன்மை அடைவீர்கள். பரிவர்த்தன ராஜயோகத்தால் உங்கள் வாழ்க்கையில் உள்ள மன கஷ்டங்கள் உள்ளது. அதிர்ஷ்டம் உங்களுக்கு முழு ஆதரவைத் தரும். திருமண முயற்சியில் இருந்த தடைகள் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். இதுவரை இருந்த மனக்கவலை, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.