குரு வக்ர பெயர்ச்சி... இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் கிரகம் ஒரு முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. குரு பகவானான வியாழன் கிரகம் அறிவு, வருமானம், நிர்வாகம் போன்றவற்றுடன் தொடர்புடையது.
வியாழன் அசுபமாக இருக்கும் போது பண இழப்பு மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் உண்டாகும். தற்போது, வியாழன் பிற்போக்கு நிலையில், அதாவது வக்ர நிலையில் உள்ளார்.
அவர் 29 ஜூலை 2022 அன்று மீனத்தில் வக்ர பெயர்ச்சி செய்தார். வியாழன் சுமார் 4 மாதங்களுக்கு அதாவது 24 நவம்பர் 2022 வரை பிற்போக்கு நிலையில் இருப்பார்.
செல்வம் மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சில ராசிக்காரர்களுக்கு வியாழனின் பிற்போக்கு நிலை அவ்வளவு நல்லதாக கருதப்படவில்லை. அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: வியாழனின் வக்ர பெயர்ச்சி காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தின் அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பெயர்ச்சியின் போது, வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். இதனுடன் திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் வரலாம். உறவினர்களுடன் சங்கடங்கள் ஏற்படலாம்.
அனைத்து இடங்களிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். வியாழக்கிழமை அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்வது நிவாரணம் அளிக்கும்.
கடகம்: குரு பகவானின் பிற்போக்கு நிலை, கடக ராசிக்காரர்களின் பணிகளை தாமதப்படுத்தலாம். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம். பணியிடத்தில் சில சங்கடங்கள் ஏற்படலாம்.
இருப்பினும், உங்கள் புத்திசாலித்தனத்தால், இவற்றை சரி செய்வீர்கள். உறவினர்களுக்கு இடையில் மன சஞ்சலம் ஏற்படலாம். அனைத்து இடங்களிலும் அமைதியாக இருங்கள். வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள். முக்கியமான வேலையைச் செய்வதற்கு முன், மூத்தவர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் சிறப்பு கவனம் தேவை. அவசரப்பட்டு பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு உங்கள் சொந்த அறிவைப் புதுப்பித்துக் கொள்வது நல்லது. அனைவரிடமும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள். யாரையும் எளிதில் நம்பி விட வேண்டாம்.
வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று விஷ்ணுவை வழிபடவும். பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு உதவுங்கள்.
மீனம்: வியாழனின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். மீன ராசியின் அதிபதியும் வியாழன்தான். மீன ராசிக்காரர்கள் சோம்பலை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், நீங்கள் நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
வருமானத்தைப் பெருக்க அதிகம் போராட வேண்டியிருக்கும். பணியிடத்திலும் பல சவாலான சூழ்நிலைகள் ஏற்படலாம்.
வியாழனின் வக்ர பெயர்ச்சி தாக்கங்களை தவிர்க்க, வியாழன் அன்று விரதம் இருந்தால் பலன் கிடைக்கும். உங்கள் மனைவியுடன் தகராறு செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பாசமாக நடந்துகொள்ளுங்கள்.