குரு அதிசார பெயர்ச்சியால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரத்தையும் மாற்றுகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைந்தார். அதோடு அக்டோபர் 08 ஆம் திகதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு மாறினார்.

இந்நிலையில் நவம்பர் 11 ஆம் திகதி கடகத்தில் குரு அதிசார வக்ர பெயர்ச்சி நிகழவுள்ளது. இப்போது குருவின் அதிசார வக்ர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் குரு பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படலாம். மேலும் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. குருவின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் இரட்டிப்பு உயர்வு ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். முக்கியமாக இந்த காலத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் குரு வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் வெற்றிகள் குவியும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
