துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ; அனுர அரசை பாராட்டும் சரத் பொன்சேகா
நாட்டில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு அதை நிர்வகிக்கும் திறன் கொண்டது எனவும் சரத் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக, பல்வேறு குழுக்கள் அமைதியின்மையை உருவாக்குவதற்கும், இனவாத பதற்றங்களைத் தூண்டுவதற்கும், பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இருப்பினும், ஆயுதப்படைகள் தங்கள் கடமைகளை உரிய முறையில் முன்னெடுப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் முற்று முழுதாக ஒழிக்கப்படவில்லை. இந்த நிலையில், நாட்டில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.