கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிசூடு
கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று(13.02.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகத்துவாரம் பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் மீதே அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி துப்பாக்கிச் சன்னங்கள் உடலின் பல பகுதிகளில் ஆழமாகப் பதிந்த நிலையில் படுகாயமடைந்த வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
இந்நிலையில்,
கார் ஒன்றில் வந்த மர்ம நபர்களே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனவும், மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.