ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் சம்பவம் செய்த நபர் ; துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்த வெள்ளை மாளிகை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த உடனேயே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை இரகசிய சேவை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர். சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருடாந்த இரவு விருந்து
வொஷிங்டனில் உள்ள 'வொஷிங்டன் ஹில்டன்' ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வின் போது, துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்படும் பலத்த சத்தங்கள் கேட்டதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று (26) மாலை இடம்பெற்ற இந்த அமைதியற்ற சூழல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, மண்டபத்திற்குள் "பெரிய சத்தம்" அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டவுடன், ஜனாதிபதியும் விருந்தினர்களும் தரையில் விழுந்து பாதுகாப்பைத் தேடியுள்ளனர்.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியா ட்ரம்பையும் பிரதான மேடையிலிருந்து அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நவீன ரக துப்பாக்கிகளுடன் கூடிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் அவர் அமர்ந்திருந்த பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் தலைவி வெய்ஜியா ஜியாங், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு மீண்டும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.
🚨#BREAKING
— MəanL¡LMə♡₩ (@MeanLILMeoW) April 26, 2026
WHITE HOUSE CORESPONDENTS DINNER - "SHOTS FIRED"
WASHINGTON DC -
TRUMP AND MELANIA werent even aware shots were fired.
A man allegedly armed began shooting when he entered the hallway near the dining room,where he was met by POLICE and was tackled to the ground… pic.twitter.com/dKbcYO6Qr8