உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படும் கொய்யா
கொய்யா பழத்தில் வைட்டமின் சி உயிர்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வேறெந்த பழத்திலும் இல்லாத அளவு உயிர்ச்சத்து கொய்யாப்பழத்தில் அதிகளவாக உள்ளது.
கொய்யாவை கொய்யா விதைகளுடன் உண்பதில் தான் அதிகளவான சத்துக்கள் உள்ளது.
இது வளரும் சிறுவர்களின் எலும்பு பலம் பெறுவதோடு உடல் வளர்ச்சி ஏற்பட மிகவும் உதவுகிறது.
பயன்கள்
உடலில் உள்ள எந்த வகையான புண்களை ஆற்றும் சக்தி இந்த கொய்யாப்பழத்திற்கு காணப்படுகிறது.
சொறி சிரங்கு குணமாவதோடு பற்களுக்கும் நல்ல பலத்தை தருகின்றது. இரத்த சோகை குணமாவதோடு கொய்யா பழத்தில் விஷக்கிருமிகளை அழிக்கும் சக்தி உடையது.
சளிபிரச்சனை உள்ளவர்கள் கொய்யா பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகுத்தூள், உப்பு தூள் சேர்த்து உண்பார்கள்.
கொய்யா பழத்தில் வைட்டமின் C,B1,B2 சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, காலரி என்ற உஷ்ணச் சக்தியும் உள்ளது.