அனுர அரசின் கிடுக்கிப்பிடி; பிள்ளையானுக்கு மீட்சி இல்லை

Pillayan Easter Attack Sri Lanka Sivanesathurai Santhirakanthan Kidnapping Nalinda Jayatissa
By Sulokshi Apr 24, 2025 08:30 AM GMT
Report

  முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுர அரசின் கிடுக்கிப்பிடி; பிள்ளையானுக்கு மீட்சி இல்லை | Grip Anura Govt No Recovery For Pillaiyaan

மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு

தலைக்கவசத்துடன் நடமாடினால் சோதனை; பொலிஸாருக்கு பறந்த உத்தரவு

தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்து வருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றன.

அது தொடர்பான முன்னேற்றம் எதிர்வரும் காலங்களில் பொலிஸாரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதோடு பிள்ளையானிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாவதுடன், அவற்றில் சில சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.

அனுர அரசின் கிடுக்கிப்பிடி; பிள்ளையானுக்கு மீட்சி இல்லை | Grip Anura Govt No Recovery For Pillaiyaan

சில குற்றச்சாட்டுகள் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகும். அவை தொடர்பில் விசாரிக்கப்படுகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த விசாரணைகளின் பிரகாரம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில கொலை வழக்குகளில் அவர்கள் எந்தவிதத்தில் தொடர்பைக் கொண்டிருந்தார்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணை என்பது மிகவும் உணர்திறன் மிக்க விடயமாகும் என தெரிவித்த அமைச்சர், அதில் பேராயர் கர்தினால் உள்ளிட்ட பல தரப்பினர் திருப்தியடையும் வகையில் பெறுபேறுகள் கிடைத்து வருவதாகவும் கூறினார்.

யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

 ஈஸ்டர் தின தாக்குதல் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் பொறுப்பு நீதிமன்றத்துக்கும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் பாரப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக விசாரணைகள் முறையாக இடம்பெறுகின்றன என்ற உத்தரவாதத்தை வழங்க முடியும். எனவே, பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்குச் சரியான திகதியைக் கூற முடியாது.

அனுர அரசின் கிடுக்கிப்பிடி; பிள்ளையானுக்கு மீட்சி இல்லை | Grip Anura Govt No Recovery For Pillaiyaan

பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்த வேண்டும் எனப் பலர் குழப்பமடைந்தாலும், அரசுக்குக் குழப்பமடைய வேண்டிய தேவை இல்லை என்றும் அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என இதன்போது அமைச்சரவைப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர், “பிள்ளையானைச் சந்தித்து வந்ததன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து அவர் எதுவும் கூறவில்லை என உதய கம்மன்பில கூறியிருந்தார்.

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள்!

கருணா, பிள்ளையான் மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகள்!

எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படும் போது இந்த வலையமைப்பு மற்றும் அதன் விசாலம் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு அப்பாலான திகதிகளில் இடம்பெற்ற பல கொலைகள் மற்றும் கப்பம் கோரல்கள் குறித்தும் பிள்ளையானிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி

தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி

சிறையில் இருந்த பிள்ளையான் இதில் தொடர்புபடவில்லை என மறுக்க முடியாது. கடந்த காலங்களில் பலர் சிறையிலிருந்து குற்றங்களை வழிநடத்திய வரலாறுகள் உள்ளன. எனவே, பிள்ளையான் இதன் பின்னணியில் உள்ளாரா? என்பது குறித்து விசாரணைகளில் தெரியவரும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US