இளம் வயதில் நரை முடியா? காரணம் என்ன தெரியுமா?
தற்பொழுது பெரும்பாலானோருக்குத் தலையில் இளம் நரை மிக விரைவில் வந்துவிடுகிறது.
இவ்வாறு நரை முடி வருவதற்கு மரபியலும் வயதும் பெரிய பங்கு வகிக்கிறது என்றாலும், விட்டமின் குறைபாடுகள் இந்த செயல்முறையைத் துரிதப்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஒருவருக்கு இளம் வயதிலேயே நரைத்த முடி வருகிறது என்றால், அவர்களுக்கு விட்டமின் பி12, துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
போதுமான விட்டமின்கள் இல்லாமல், மெலனோசைட்டுகள் குறைவான செயல்திறன் கொண்டவையாகி, முன்னதாகவே நரை முடி தோன்றும்.
சரியான விட்டமின் உட்கொள்ளலை மேற்கொள்வது இந்த செயல்முறையை மெதுவாக்குவதோடு தலைமுடியின் இயற்கையான நிறத்தை நீண்ட காலம் தக்கவைக்க உதவும்.
முட்டை, பால் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போன்ற உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமான தலைமுடி நிறத்தைப் பராமரிக்க உதவும்.
சூரிய ஒளி மற்றும் கொழுப்பு நிறைந்த மீன், செறிவூட்டப்பட்ட பால் மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள் போன்ற உணவு ஆதாரங்கள் விட்டமின் டி அளவை மேம்படுத்தும்.
விட்டமின் பி7 என்று அழைக்கப்படும் பயோட்டின், முடி வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியமான ஒன்று.
இது அரிதாக இருந்தாலும், பயோட்டின் குறைபாடு இருந்தால் முடி மெலிந்து, முன்கூட்டியே நரைப்பதற்கு வழிவகுக்கும்.
இதனைத் தடுக்க நட்ஸ், முழு தானியங்களை உணவில் சேர்ப்பது நல்லது என ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.