இளம் வயதில் நரை முடி பிரச்சனையா? இதுவே அதற்கு முக்கிய காரணங்கள்
வயது முதிர்ச்சி அடைந்தவுடன் நரை முடி வருவது என்பது மிகவும் பொதுவான விடயம். ஆனால் சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பிக்கும் போதுதான் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. சிறிய வயதில் நரை முடி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களை அறிந்து கொண்டால், இளம் வயதில் நரை முடி வருவதை தடுக்கமுடியும்.
இளம் வயதில் நரை முடி வருவதற்கான முக்கிய காரணங்கள் இவைதான்:
வைட்டமின் B12 குறைபாடு: சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு Vitamin பி12 குறைபாடும் காரணமாக இருக்கலாம். இந்த வைட்டமின் பி12 உடலுக்கு ஆற்றலை கொடுப்பதோடு, முடி வளர்ச்சி மற்றும் முடியின் நிறத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
இரத்த சிவப்பணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க Vitamin பி-12 உடலுக்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக, முடியின் கருமை நிறத்திற்கு காரணமான மெலனின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது.
புகைபிடித்தல்: சிறு வயதிலேயே புகைப்பிடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டாலும் முடி நரைப்பதற்கும் தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஏனெனில், புகைபிடிப்பதால், இரத்த தமனிகள் குறுகி, முடியின் வேர்களுக்கு போதுமான இரத்தம் கிடைக்காமல் போகிறது. சிறு வயதிலேயே முடி நரைப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.
மன அழுத்தம்: மன அழுத்தம் உடலை மட்டுமல்ல, முடியையும் பாதிக்கிறது. இதன் காரணமாக, தூக்கமின்மை, பதற்றம், பசியின்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடும் என்பது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இனி இள வயது நரை முடி பிரச்சனை ஏற்படாமல் இருக்க இவைகளை முக்கியமாக பின்பற்ற வேண்டும்:
Vitamin பி12 சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் உடற்பயிற்சி செய்தல்
புகைபிடிப்பதை நிறுத்துதல்
யோகா பயிற்சி செய்தல்
மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் இருத்தல்
பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுதல்