ReeCha Organic Farm இல் பிரமாண்ட சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்!
தமிழர் பகுதியில் மிகப்பிரமாண்டாய் உருவாகியுள்ள சுற்றுலாத்தலமான ReeCha Organic Farm இல் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
வரவிருக்கும் குரோதி சித்திரை புத்தாண்டை, 14 ஆம் திகதி ReeCha வில் வெகு விமர்சையாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, முட்டி உடைத்தல், தாரா நடை,கயிறு இழுத்தல்,சாக்கோட்டம், பழம் பொறுக்குதல்,நீர் நிரப்புதல் மற்றும் கிளித்தட்டு போன்ற பல பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன.
கும்மி, கோலாட்டம் மற்றும் பரதம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் DJ இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
எனவே ReeCha பண்ணைக்கு சென்று சித்திரை புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.