பெற்ற குழந்தைக்கு இளம் பட்டதாரி தாய் செய்த செயல் ; இலங்கையில் பெரும் ரணத்தை ஏற்படுத்திய சம்பவம்
குருநாகல் மாவட்டத்தின் கிரியுல்ல பகுதியில் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் 19 நாள் சிசு கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் குறித்த சிசுவின் தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழப்பமான மனநிலை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சம்பவம் நடந்த நேரத்தில் தாய், தந்தை மற்றும் குழந்தையும் வீட்டில் இருந்துள்ளதாகவும், திடீரென சத்தம் கேட்டு பொரியியலாளரான கணவன் தேடிய போது குழந்தையும் தாயும் கிணற்றில் விழுந்ததை கண்டுபிடித்துள்ளார்.
தாய் கைது கிணற்றில் விழுந்த நிலையில், மனைவி அங்குள்ள குழாய் உதவியுடன் வெளியே வந்துள்ளார்.
பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட குழப்பமான மனநிலை காரணமாக, கிணற்றில் குதித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.