அரசாங்கம் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக மாறியிருக்கிறது! சஜித்
தற்போதைய அரசாங்கம் பல்தேசியக் கம்பனிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக மாறியிருப்பதாகவும், எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்னமும் உரியவாறு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadesa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவும், மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையிலான கொள்கைத்திட்டத்தை எமது கட்சி தயாரித்துவருகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadesa) தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (14) அம்பலாங்கொடைக்கு அண்மையிலுள்ள மீனவ சமூகத்தினருடன் சந்திப்பொன்றை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தியிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்த நிலையில் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் அங்கு தெரிவித்ததாவது ,
அம்பலாங்கொடையில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றும் மீன்பிடித்துறையை அபிவிருத்து செய்வதற்காக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு மீனவசமூகத்தின் வாழ்வதாரத்தை மேம்படுத்துவோம்.
இதேவேளை எமது நாட்டில் கடற்பிராந்தியங்களுக்கு அண்மையில் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைந்துள்ளது. பெரிய அளவிலான கடற்பிராந்தியம் எமது நாட்டில் இருந்த போதிலும் மொத்தத்தேசிய உற்பத்தியில் மீன்பிடித்துறையின் பங்களிப்பு வெறும் 1.2 - 1.3 சதவீதமாக மாத்திரமே கானப்படுவதாக சஜித் இதன்போது சுட்டிகாட்டியுள்ளார்.
மேலும் மீன்படி நடவடிக்கையில் கிடைக்கும் மீன்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான மீன்கள் மட்டுமே ஏற்றுமதிக்கு உகந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.