வடக்கு ஆலயங்கள் தொடர்பில் ஆளுநர் கவலை!
வடக்கில் ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும், அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம்(26) நடைபெற்ற சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

ஆலயங்கள் சமூகங்களை வழிப்படுத்தவேண்டும்
ஆலயங்களின் நிர்வாகங்களுக்கும் அந்தணர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றமை வேதனை அளிக்கிறது. இதற்காக அவர்கள் அதிகளவு பணத்தை வீணாகச் செலவு செய்கின்றனர்.
ஆலயங்கள் சமூகங்களை வழிப்படுத்தவேண்டும், அப்படிப்பட்ட ஆலயங்கள் வழக்குகளுக்காக நீதிமன்றங்களை நாடும் நிலைமை ஏற்பட்டது துன்பகரமானது எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசன், இந்து சமயப் பேரவையின் தலைவர் சக்திகிரீவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        