யாழில் முடக்கப்பட்ட அரச அலுவலகம்
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபையின் தலைமைக் காரியாலய பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காரியாலயம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
அத்தியாவசிய தேவை கருதி பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிக்கு அழைக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களில் இருவர் நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனைக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த இருவருக்கும் தொற்று உறுதியான நிலையில் அவர்களுடன் பணியாற்றிய இன்னொரு ஊழியருக்கும் நோய் அறிகுறி காணப்படுவதால் இன்று பரிசோதனைக்காக சென்றிருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பணிமனையை தற்காலிகமாக மூடி அனைத்து ஊழியர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது