இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழக அரசு!
மு.க. ஸ்டாலின் தலமையிலான தமிழக அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
பெற்றோரை பிரிந்த அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களை குடும்பமாக அதிகரித்து, இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்படாத சலுகையை பெற தமிழக அரசு முடிவு செய்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளமையானது தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் விவாகரத்து பெற்று அல்லது பெற்றோரை விட்டு தனியாக இருக்கும் பெண்கள் ஒருவரை தனிக் குடும்பமாக அங்கீகரித்து அவர்களும் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
அதன் மூலம் குடும்ப அட்டை பெறுவதற்கு தனியாக வாழ்ந்து வரும் பெண்கள் தனி குடும்பம் என்ற தகுதியைப் பெறுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இன் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.
அந்த வகையில் கேரளாவின் அரசியல் விமர்சகரும் பிரபல செய்தி நிறுவனத்தின் நிறுவனருமான சுஜித் நாயர் தனது முகநூல் பதிவில்,
கணவர் மற்றும் பெற்றோரை பிரிந்து வாழும் ஒற்றை பெண்களை குடும்பமாக அங்கீகரித்து, அவர்களை இதுவரை பெறாத பலன்களை பெறுவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. இது ஒரு முற்போக்கான ஆட்சி. நல்ல செயல் ஸ்டாலின் என கூறியுள்ளார்.