மருந்து பரிசோதனை ஆய்வகங்கள் உருவாக்க அரசு அவதானம்
எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நம்புவதாக அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.
கண்டி பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தனது கருத்துக்களை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
"இந்தப் பரிசோதனைகள் சுகாதாரக் கண்காணிப்பின் பல்வேறு கட்டங்களில் செய்யப்பட வேண்டும். ஆனால் புகார் இருந்தால் மட்டுமே நாங்கள் அவற்றைச் செய்துள்ளோம்.
அது போதாது. இப்போது அரசாங்கம் இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு பரிசோதனை வசதிகளை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.