360,000 லீற்றர் ஒட்சிசன் இறக்குமதி செய்யும் அரசாங்கம்
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் 360,000 லீற்றர்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கொவிட் - 19 தொற்று தீவிரமடைந்துள்ள நோயாளர்களுக்குத் தேவையான திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக, 120,000 லீற்றர் ஒட்சிசனை மாதாந்தம் இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது பரவி வரும் திரிபடைந்த கொவிட் வைரஸ் காரணமாக ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, போதுமானளவு ஒட்சிசனை நாட்டில் களஞ்சியப்படுத்துவதற்கு இயலுமான வகையில் தற்போது மாதாந்தம் இறக்குமதி செய்யப்படும் 120,000 லீற்றர்களுக்கு மேலதிகமாக 360,000 லீற்றர்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.