இலங்கையில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு!

Government Of Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Shankar May 24, 2024 03:59 PM GMT
Report

இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், அதனை தடுக்கும் வகையிலான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவிக்கின்றார்.

கார் மீது விழுந்த பாரிய மரம் ; தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்

கார் மீது விழுந்த பாரிய மரம் ; தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்

இலங்கையில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு! | Government Action Dangerous Trees In Sri Lanka

இலங்க்கையில் நிலவும் சீரற்ற வானிலை தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்றையதினம் (24-05-2024) இடம்பெற்றது.

மனைவியின் தகாத உறவை கண்டதால் கணவன் கொலை; இலங்கையில் பயங்கரம்

மனைவியின் தகாத உறவை கண்டதால் கணவன் கொலை; இலங்கையில் பயங்கரம்

இலங்கையில் கடந்த 19ஆம் திகதி முதல் இன்று வரை மரங்கள் முறிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு! | Government Action Dangerous Trees In Sri Lanka

மேலும், 18 மாவட்டங்களில் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35,796 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மரங்கள் முறிந்து வீழ்வதனால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி ஹெலிக்கொப்டர் விபத்து; இராணுவம் வெளியிட்ட தகவல்

ஈரான் ஜனாதிபதி ஹெலிக்கொப்டர் விபத்து; இராணுவம் வெளியிட்ட தகவல்

சமீபக் காலமாக மரங்கள் விழும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்கும் நடவடிக்கையாக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்த அதிரடி முடிவு! | Government Action Dangerous Trees In Sri Lanka

மேலும், வீதிகளில் மரங்கள் அதிகமாக விழுவதால் அவற்றைக் கட்டுப்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாகாண அதிகார சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் ஆதரவையும் அமைச்சர் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது கூறியுள்ளார்.

வீதியோரம் மரங்களை நடுவது தொடர்பில் முறையான ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் விசேட குழுவொன்றின் வழிகாட்டலின் கீழ் தேசியக் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்டிட நிர்மாணங்களால் தாழ்நிலப் பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மழை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில்,

எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், சீரற்ற காலநிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US