டொலர் விவகாரத்தில் கோட்டாபய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சீனா
இலங்கையில் உள்ளஅரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு சீனா அரசாங்கம் ஆதரவளிக்கவில்லை, இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் இலங்கை மக்களுக்கே சீனாவின் ஆதரவு இருக்கும் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய பேச்சு, சீனாவுடனான 2.5 பில்லியன் டொலர் பெறுவதற்கான கலந்துரையாடல்களை பாதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சீனா கடந்த ஆண்டு ஜூலை முதல் 2022 ஜனவரி வரை 500 மில்லியன் டொலர் மதிப்பில் 730,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இவற்றில் இலங்கை 7 கப்பல்களுக்கு மட்டுமே பணத்தை செலுத்தியுள்ளது என்றும் மீதி 12 கப்பல்களுக்கான கட்டணம் 390 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் சீன தூதுவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டாபய அரசுடன் மிக நெருக்கத்தை கடைப்பிடித்த சீன அரசாங்கம் மேற் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளமை, மகிந்த - கோட்டாபய அரசை கைவிட்டுள்ளதாகவே தென்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.