கோட்டபாயவால் சிங்கப்பூருக்கு சிக்கலாம்!
சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இலங்கைக்கு வருவது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணித் தலைவர் ஒருவரிடம் ஊடகம் ஒன்றினால் வினவப்பட்டபோது, தற்போது சிங்கப்பூரிலிருக்கும் கோட்டாபாய ராஜபக்க்ஷ எதிர்வரும் 11ஆம் திகதி வரை அங்கு தங்குவதற்கு விசா கிடைத்துள்ளதால், அதற்கு முன்னர் இலங்கைக்கு வருவாரா அல்லது அன்றைய தினம் வருவாரா என்பது தொடர்பில் உறுதியான பதிலை அவர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட வீசா காலத்துக்கும் மேலதிகமாக அவர் சிங்கப்பூரில் தங்கியிருப்பதானது அந்நாட்டில் பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் தமக்கு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.