நாளை நாட்டுக்கு வருவாரா கோட்டாபய!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை இலங்கை திரும்ப வாய்ப்புள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுவரையில், முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்புவது தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை ஆரம்பித்ததுடன் ஜனாதிபதியை பதிவி விக்லகுமாறும் வலியுறுத்திய நிலையில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்க்ஷ நாட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.
இலங்கையிலிருந்து மாலைதீவிக்கு சென்ற கோட்டாபய தனது ஜனாதிபதி பதவியையும் இராஜினாமா செய்திருந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதியாக நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க தெரிவானார்.
நாடு விட்டு நாடு மாற்றம்
இந்நிலையில் மாலைதீவில் இருந்து வெளியேறிய கோட்டாபய சிங்கப்ப்பூரிற்கு சென்று தங்கியிருந்தார்.
எனினும் அவரது விசாவை பாதுகாப்பை காரணம்காட்டி சிங்கப்பூர் தொடர்ந்து நீடிக்காத நிலையில் அங்கிருந்து வெளியேறி தாய்லாந்தில் தஞ்சமடைந்த நிலையில் அமெரிக்கா செவதற்கு முயற்சி செய்த நிலையில் அமெரிக்கா அவரது கோரிக்கையை நிராகரித்திருந்தது.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.