நாடுவிட்டு நாடு தாவும் கோட்டபாய ராஜபக்ச; வெளியான தகவல்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய ராஜபக்சவின் நுழைவிசைவு காலம் முடிவடைவதனையடுத்து நாளை 11 ஆம் திகதி அவர் தாய்லாந்து சென்று அங்கு தற்காலிகமாக தங்கியிருப்பார் எனக் கூறப்படுகிறது.
மீண்டும் இலங்கை திரும்பவிருந்த கோட்டபாய ராஜபக்ச இலங்கையின் இன்றைய சூழ்நிலையில் நாடு திரும்புவது சிறந்ததல்ல என இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்திருந்தது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கியிருப்பது அந்நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படும் நிலையிலேயே அவர் தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.