கோட்டா கோ கமவில் மக்களின் கவனத்தை ஈர்த்த மனிதாபிமான செயல்! (Photo)
அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் அமைதியான முறையில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) பதவி விலகக் கோரி தொடர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் (Gota Go Gama) மக்களின் மனிதாபிமான செயற்பாடு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அலுமாரியில் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களிடம் மேலதிகமாக இருக்கும் எதையும் இங்கு அன்பளிப்புச் செய்ய முடியும்.
அதே போன்று உங்களுக்கு தேவையான எந்தப் பொருளையும் இங்கிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்ற வாசகத்துடன் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், இவ்வாறான மனிதாபிமான செயற்பாடு பலருக்கும் பயனுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.