இலங்கையில் தங்கம் வாங்க ஆசையாக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
இலங்கையில் தங்கத்தின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ளதாக உள்ளூர் தங்க விற்பனையாளர்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று காலை கொழும்பு கோட்டையில் 24 காரட் தங்க நாணயத்தின் விலை 145,000 ரூபாவாகவும், 22 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 134,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இம்மாத தொடக்கத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாகவும் 22 காரட் தங்கத்தின் விலை 170,000 ரூபாவாகவும் இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆண்டு (2023) இதுவரை ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தங்கத்தின் அதிகபட்ச விலை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில் 24 காரட் தங்க நாணயத்தின் அதிகபட்ச விலை 193,000 ரூபாவாகவும் , 22 காரட் தங்க நாணயத்தின் விலை 178,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.