05 முதல் 10ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
5 முதல் 10 வரையான தரங்களுக்கு மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ இதனை குறிப்பிட்டார்.

பரீட்சை நடத்தப்பட மாட்டாது
அதன்படி, 5 முதல் 10 வரையான தரங்களுக்கு இம்முறை மூன்றாம் தவணைக்கான பரீட்சை நடத்தப்பட மாட்டாது எனவும், மாணவர்கள் அடுத்த தரங்களுக்கு வகுப்பேற்றப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் 11 ஆம் தரத்துக்கு மாத்திரம் மாதிரி பரீட்சையொன்று நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.