ஒரே நாளில் இரு தடவைகள் உயர்ந்தது தங்கத்தின் விலை ; அதிர்ச்சியின் உச்சத்தில் நகைப்பிரியர்கள்
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் தங்க விலை அதிகரிப்பின் பிரதிபலிப்பானது, இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க உயர்ச்சியைக் காட்டியுள்ளது.
தங்க விலை நிலவரம்
இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 279,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 256,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 210,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 34,875 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 32,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.