இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை; நகைப்பிரியர்கள் க்ஷாக் !
4 நாட்களுக்கு பிறகு தங்கம் விலையானது இறங்கிய வேகத்திலேயே மீண்டும் இன்று கூடியுள்ளமை நகைபிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் மீண்டும் மாலையும் விலை அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் இரு தடவை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை இரண்டு முறை அதிகரித்துள்ளது. நேற்று (மே 5) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (மே 6) காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது.
அதன் படி கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2600 உயர்வு
மாலையில் கிராம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்கப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை காலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,410க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,280க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மதியம் 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ.50-க்கு உயர்ந்து ரூ.7460-க்கும் சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.59680-க்கு விற்கப்படுகிறது.