நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்த தங்கம் விலை!
தங்கத்தின் விலையானது கடந்த நாட்களில் குறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்வடைத்துள்ளமை நகைப்பிரியர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
அந்தவகையில் சென்னையில் நேற்று ஜூன் 5ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று (6) அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரம்
அதன் படி, இன்று ஜூன் 6ஆம் தேதி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5570க்கும் ஒரு சவரனுக்கு ரூ.488 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.96.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.96,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.