இலங்கையில் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை இன்றைய தினம் மூவாயிரம் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 14 ஆம் திதி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அதன் விலையில் 3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

3,000 ரூபாய் குறைவடைந்துள்ளது
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,688 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதேவேளை உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலராகப் பதிவாகியுள்ளதுடன் வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளதுடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 76.35 டொலராகப் பதிவாகியுள்ளது.