இலங்கையில் மாத கடைசி நாளில் குறைந்த தங்கம் விலை; இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் இன்றும் (ஏப்ரல் 30) கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலையில் 2,000 ரூபாய் குறைவடைந்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 390,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்றே குறைந்துள்ளமை நுகர்வோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.