மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்க விலை!
உலக சந்தையில் தொடர்ந்து நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி , 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 197,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,800 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,550 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.
எனினும் , ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டி மக்களுக்கு எட்டாக்கனியாக தஙம் விலை உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.