மக்களின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட தங்கவிலை!
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 183,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,300 ரூபாவாக காணப்படுகின்றது.

வரலாறு காணாத விலை உயர்வு
அத்துடன் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தின் விலையானது வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்தது.

அந்தவகையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கடந்த கிழமையளவில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 140000 என்ற பெறுமதிக்கு குறைந்திருந்தது.
இந்த விலை வீழ்ச்சியானது ஒரு சில நாட்கள் மாத்திரமே காணப்பட்ட நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.