மாதத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம் விலை!
தங்கத்தின் விலை கடந்தவாரங்களில் குறிவடைந்து வந்த நிலையில் இன்றையதினம் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு க்ஷாக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கவிலை நிலவரம்
இந்நிலையில் நேற்று ஜூலை 31ஆம் திகதி தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாயும், சவரனுக்கு 280 ரூபாயும் உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று ஆகஸ்ட் 1ஆம் திகதி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440க்கும் விற்பனையாகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5267 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,136க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் 91.70 ரூபாய்க்கும், ஒரு கிலோ 91,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.